Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென முறிந்த மரம்…. அதிஷ்டவசமாக தப்பிய பொதுமக்கள்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

காவல்நிலையம் முன்பு இருந்த புளியமரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர்-ராசிபுரம் பிரதான சாலை பகுதியின் இரு புறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளனர். இந்நிலையில் வெண்ணந்தூர் காவல்நிலையம் எதிரே இருந்த புளியமரத்தின் கிளை இரவு சமயத்தில் திடீரென முறிந்து சாலையில் விழுந்துள்ளது. மேலும் அதிஷ்டவசமாக எவ்வித விபத்தும் இதனால் ஏற்படவில்லை.

இதனையடுத்து மரம் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்த மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கு பின்னர் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சரி செய்தனர்.

Categories

Tech |