மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டு விட்டு சுரேஷ் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து மரம் முறிந்ததால் அறுந்து கிடந்த மின்கம்பியை சுரேஷ் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.