திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாரமங்கலத்தில் பக்கிரிசாமி ( வயது 76 ), சந்திரா ( வயது 68 ) என்ற தம்பதியினர் கிட்டத்தட்ட 52 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பக்கிரிசாமி திடீரென இறந்துள்ளார். இந்த நிலையில் கணவரின் உடலுக்கு அருகில் அமர்ந்து மனைவி சந்திரா அழுது கொண்டிருந்தார். இதையடுத்து பிரிவை தாங்க முடியாமல் சந்திராவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரா அடிக்கடி கணவருடன் சேர்ந்து நானும் இறந்து விட்டால் அது என்னுடைய பாக்கியம் என்று கூறி வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் ஒன்றாக உயிரிழந்துள்ளனர்.