இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 40வது படமாகும். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். தற்போது வெற்றிமாறன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.