உத்தரகாண்ட் ,உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நலிவடைந்து கொண்டு வருகிறது. இதனை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் சேர்ந்துகொண்டு மேலும் கீழே இழுத்துச் செல்கின்றனர். அக்காவும் தம்பியும் கட்சியை இருந்த இடமே தெரியாமல் ஆக்கி விடுவார்கள் போலும். அதோடு இருவருக்கும் இடையே தீவிர கருத்து வேறுபாடு நிலவி வருகிறது இது எப்போது வேண்டுமானாலும் பூகம்பமாக வெடிக்கலாம்.” என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது, “எனது சகோதரர் ராகுலுக்கு நான் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டேன் அதே போல் அவரும் எனக்காக அதையே செய்வார். எங்களுக்குள் பிளவு இருப்பதாகவும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர். இவையெல்லாம் அப்பட்டமான பொய். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு யார் இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்பது தெரியும். பாஜகவில் தான் மோதல் கருத்து வேறுபாடு எல்லாம் உள்ளது எங்களிடம் இல்லை. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கும், மற்றும் மத்திய மந்திரி அமித் ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பது நாடறிந்த ஒன்று.” இவ்வாறு அவர் கூறினார்.