Categories
தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களே…! உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. ஜியோ நிறுவனம் அறிவிப்பு…!!!

செயற்கைகோள் மூலமாக தடையின்றி இணையதள சேவை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் செயற்கைக்கோள் மூலமாக நேரடி இணைய தள சேவை வழங்க உள்ளதாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. லக்சம்பர்க்கை  சேர்ந்த தொலைதொடர்பு நிறுவனமான ESI யுடன் இணைந்து ஜியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க “ஜியோ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம்” என்ற பெயரில் புதிதாக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இஎஸ்ஐ நிறுவனத்தின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் இனிப்புகளை ஜியோ நிறுவனம் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் இணையதள நிறுவனங்களும் செல்போன்களும் தடையின்றி இணைய சேவை வழங்கப்படும் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. எலான் மஸ்கின்  செயற்கைக்கோள் வழி இணையதள சேவை வழங்கும் நிறுவனம் இந்தியாவில் தடம் பதிக்க முயலும் நிலையில், இந்த அறிவிப்பை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |