Categories
தேசிய செய்திகள்

“PF வட்டி விகிதம் அதிகரிப்பு…” விரைவில் வெளியாக உள்ள சூப்பர் அறிவிப்பு….!!

2020-22ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(PF) வட்டி விகிதம் அதிகரிப்பு தொடர்பான முடிவுகள் குறித்து வருகிற மார்ச் மாதம் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இதுகுறித்து கூறியதாவது, “தொழிலாளர் நலத்துறை அமைப்பின் மத்திய அரங்காவலர் குழு கூட்டம் வருகிற மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.

அதில் 2021- 22 ஆம் ஆண்டிற்கான PF வட்டி விகிதங்கள் குறித்து நிர்ணயிக்கப்படும்” என கூறியுள்ளார். கடந்த 2019- 20 ஆம் ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது தற்போது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதத்திற்கு பிறகு வெளியிடப்படும் மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |