Categories
மாநில செய்திகள்

அலர்ட்!…. இன்று ( பிப்.15 ) கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் இன்றுக்குள் ( பிப்.15 ) பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எனவே விவசாயிகள் இ-சேவை மையம் வாயில்களில் காத்துக் கிடக்கின்றனர்.

தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ஏக்கருக்கு ரூ. 488.25 பிரீமியம் தொகையை இன்றுக்குள் ( பிப்.15 ) செலுத்த வேண்டும். மேலும் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று, அதன்பிறகு இ-சேவை மையங்களுக்கு சென்று சிட்டா பெற்று ஆன்லைனில் பணம் செலுத்த செல்லும் விவசாயிகள் இ-சேவை மையங்களில் குவிந்துள்ளனர்.

Categories

Tech |