Categories
தேசிய செய்திகள்

54 சீன செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு முடிவு….வெளியான தகவல்….!!!

மத்திய அரசு 54 சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்ய போவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா- சீன படைகள் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதியன்று நள்ளிரவில் லடாக்கில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் இந்த மோதலில் வீரமரணம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 2020 ஜூன் 29ஆம் தேதி முதல் டிக்டாக் உள்பட 58 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. மேலும் மத்திய அரசால் பல சீன மொபைல் செயலிகளுக்கு தடை தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புயூட்டி மேகரா செல்பி, பேஸ் பூஸ்டர், ஸ்வீட் கேமரா ஹெச்டி, ஆப் லாக்கர், டூயல் ஸ்பேஸ் லைட், பியூட்டி கேமரா உள்பட மேலும் 54 செய்த செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்தது. இது  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த சீன செயலிகளை தடை செய்யும் முடிவு எடுத்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தகவல் வெளியாகின. மேலும் இந்த 54 செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட து தொடர்பான, அதிகாரப்பூர்வ தகவலை  இந்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் மொத்த எண்ணிக்கை 200 க்கும் மேல் அதிகரித்துள்ளது.

Categories

Tech |