மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உணவகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஹரியானாவில் உள்ள குருகிராம் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு உயர்தர உணவகத்திற்கு சிருஷ்டி பாண்டே என்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வந்துள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த ஊழியர் ஒருவர், அவரை உள்ளே அனுமதிக்காமல் வெளியே துரத்தினார். ஏனென்றால் சிருஷ்டி உள்ளே சென்றால் இதர வாடிக்கையாளர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என கூறி வெளியே போகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தால் சிருஷ்டி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார். ஆகவே இது குறித்து சிருஷ்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் இந்த உணவகத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் சிருஷ்டி பேட்டியளித்தபோது, சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் கவும்தேஷ் சிங் தொலைபேசியில் அவரிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர் உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் அதை மறுத்த சிருஷ்டி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரை வலியுறுத்தினார்.உடனே அதை ஏற்க மறுத்த உணவகத்தின் உரிமையாளர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார். இது சிருஷ்டியை மேலும் கோபமடையச் செய்தது.