ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் அவினாஷ் பான்டே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் விளக்கம் கோரியுள்ளார்.
அதன்படி சோனியா காந்தியிடம் தற்போது நிகழும் சூழ்நிலையை அவினாஷ் பான்டே விளக்கினார். குழந்தைகள் பலியாகும்போது அரசு ஏன் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் சோனிய காந்தி அவினாஷ் பான்டேவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவினாஷ், “இந்த மரணங்கள் குறித்து சோனியா காந்தி தெரிந்துகொள்ள விரும்பினார். இது மிகவும் துரதிர்ஷ்டகரமான நிகழ்வு, இதுகுறித்து முதலமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பாஜக இச்சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிவருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது டவிட்டர் பக்கத்தில், “இதுகுறித்த விசாரிக்க மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவை நான் வரவேற்கிறேன், ராஜஸ்தானை நோயற்ற மாநிலமாக மாற்றவதில் அரசு உறுதிபூண்டுள்ளது. குழந்தைகளின் மரணம் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. இதை அரசியலாக்கக்கூடாது. நான் முதலமைச்சராக இருந்தபோதுதான் இங்கு தீவிர கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா கூறுகையில், “குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே மிகவும் ஆபத்தான சூழ்நிலையில்தான் இருந்தனர். மருத்துவமனை நிர்வாகம் தீவிர முயற்சியெடுத்தும் மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த குழந்தைகள் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.
பகுஜுன் சமாஜ் தலைவி மாயவதி, “இச்சம்வம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயளாலர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதே சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நடந்திருந்தால், பலியான குழந்தைகளின் பொற்ரோர்களைச் சந்தித்திருப்பார்” என்று பிரியங்கா காந்தியை தாக்கிப்பேசினார்.