புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த குஜராத் ஜெயன்ட்ஸ் – புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
12 அணிகளுக்கு இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.இதில் 38-30 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது . இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள பாட்னா அணி 14 வெற்றி, ஒரு டைடிரா 4 தோல்வி என 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன், ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இதையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா – தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் 44-28 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தா அணி வெற்றி பெற்றது.இதைதொடர்ந்து நடந்த குஜராத் ஜெயன்ட்ஸ் – புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் ,இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணியும்,இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன்- தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன.