இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் டிக்கெட் கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசன 300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் 15ஆம் தேதி வரை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக திருப்பதியில் இன்று முதல் நேரடி கவுண்ட்டர்கள் மூலம் 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 9 மணி முதல் பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகளை அளவில் உள்ள பூமா தேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசன் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தசுவாமி இரண்டாவது சத்திரம் ஆகிய 3 இடங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.