இந்தியா – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலிராஜ் 66 ரன்னும், ரைகா கோஸ் 65 ரன்னும் எடுத்தனர்.இதையடுத்து 271 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி களமிறங்கியது.
இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும், எமிலியா கெர்ரின் அபாரமான ஆட்டத்தால் (119) 49 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.இதன் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி 18-ம் தேதி நடைபெற உள்ளது.