Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகரின் கடையில்….. 150 அரிசி மூட்டை…. வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தாரா?… வாக்குவாதம் செய்த அதிமுகவினர்.!!

உள்ளாட்சி தேர்தல்  நெருங்கும்   நிலையில்  தி.மு.க. பிரமுகர்   கடையில்  150  அரிசி  மூட்டை இருப்பதாக    அதிமுகவினர்  புகார் கொடுத்து  வாக்குவாதம்  செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளன. இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள்.   இதற்கிடையே  வாக்காளர்களுக்கு  பணம்  பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த  நிலையில்  கள்ளக்குறிச்சி நகராட்சியில்   11-வது வார்டில்  உள்ள  குளத்து மேட்டுத்தெருவில் இருக்கும்  தி.மு.க. பிரமுகர் ஒருவரின் பாத்திரக்கடையில் 25 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகள் அடுக்கி இருப்பதை  அ.தி.மு.க.வினர் பார்த்து உள்ளனர்.  இதனால்  சந்தேகம் அடைந்த அ.தி.மு.க.வினர் இது  பற்றி  பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில்    பறக்கும் படை அலுவலர் ஆறுமுகம் தலைமையில்  குழு  ஒன்று     திமுக பிரமுகரின் பாத்திரக்கடைக்கு விரைந்து வந்து   விசாரணை நடத்தியது.

அதற்கு  அந்த  உரிமையாளர்  விற்பனைக்காக அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்து வைத்து  இருக்கிறோம்  என்று கூறினார்.  அதற்கான ரசீதையும்  பறக்கும் படை அலுவலரிடம் காண்பித்தார்.அப்போது  அங்கு  வந்த  அ.தி.மு.க. வினர்  பறக்கும்படையினரிடம்  இவர் எப்படி பாத்திரக்கடையில் அரிசி மூட்டைகளை   வைக்கலாம்   என்று கூறி   வாக்குவாதம்  செய்தனர்.

இதற்கிடையே    வாக்காளர்களுக்கு  பணம்  பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு  பறக்கும் படை அதிகாரி கூறியாதாவது,  அரிசி மூட்டைகள்  கொள் முதல் செய்ததற்கான ரசீதை   அவர்  வைத்துள்ளார் என்று  கூற,  அதற்கு  அ.தி.மு.க. வினர்  மறுப்பு  தெரிவித்து வாக்குவாதம்  செய்தனர்.

இதனையடுத்து   அங்கு  எந்தவித  அசம்பாவித  சம்பவங்கள்  நடத்துவிடக்கூடாது  என்பதற்காக    உரிமையாளரிடம்  பறக்கும் படை அதிகாரி கடையை  மூடி செல்லுங்கள்  என்று  கூறினார்.  இதனை  தொடர்ந்து   அவரும் கடையை  மூடிவிட்டு சென்று விட்டார். இதனால்  அங்கு  சிறிது நேரம்  பரபரப்பு  ஏற்பட்டது.  மேலும்  அந்த உரிமையாளர்  அரிசி மூட்டைகளை  வாக்காளர்களுக்கு  கொடுப்பதற்காக  தான்  வைத்திருந்தாரா?  என்பது குறித்து அதிகாரிகள்  விசாரணை  நடத்தி  வருகிறார்கள்.

Categories

Tech |