தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகர்கோவிலில் நடைபெற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, “கொடுத்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி தங்கத்தாரகை அம்மா. வீடு இல்லாத ஒரு இலவச கான்கிரீட் வீடுகள், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என அவர் செய்த திட்டங்கள் எண்ணிலடங்கா.! ஆனால் தற்போது உள்ள முதல்வரோ 505 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறார்.
வெற்றி பெற்றவுடன் நான் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு தரத்துக்கானதாக இருக்கும் எனக் கூறினார். கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள் நாங்கள் தள்ளுபடி செய்கிறோம் என்றார்கள். குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் என்றார்கள் எதுவும் நடக்கவில்லை. இப்போது கொடுத்த பொங்கல் பரிசு பற்றி நாடே அறியும். கொரோனா பேரிடர் காலத்தில் காய்கறி, நிதி உதவி என மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் அதிமுகவால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது திமுக அரசு கரப்ஷன், கமிஷன் என மக்களிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு தான் இருக்கிறது. அதிமுக அரசு கொடுத்த பழக்கப்பட்டது திமுக வாங்கிய பழக்கப்பட்டது.!” இவ்வாறு அவர் கூறினார்.