Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இடியும் நிலையில் அரசு பள்ளி சமையல் கூடம்…. புதுசா கட்டி கொடுங்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

அரசு பள்ளியில் இடியும் நிலையில் இருக்கும் பழைய சமையல் கூடத்தை இடித்துவிட்டு புதிய சமையல் கூடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் செட்டியக்காபாளையம் ஊராட்சி எம்மேகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி அரசு தொடக்கப்பள்ளி. இங்கு 2 ஆசிரியர்கள் சமையல் அமைப்பாளர் மற்றும் சமையலர் என 4 பேர் பணிபுரிகின்றனர். 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் 2002-2003 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் செலவில் சமையல் கூடம் கட்டப்பட்டது. அந்த சமையல் கூடம் சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து சேதம் அடைந்தது.

இதனால் சமையல் செய்யமுடியாமல் தவித்த நிலையில் சிலரின் உதவியுடன் அதன் அருகிலேயே தற்காலிகமாக ஓடு மேய்ந்து சமைத்து வந்தனர். ஆனால் மழைக்காலங்களில் மழைநீர் புகுந்து சமையல் பொருட்கள் நாசமாகி விடுவதாகவும் விடுமுறை நாட்களில் நாய்கள் அந்த இடத்திற்கு வந்து பொருட்களை தின்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறி ஆபத்தான நிலையில் இருக்கும் சமையல் கூடத்தை இடித்துவிட்டு புதிய சமையல் கூடம் கட்டித் தருமாறு அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |