Categories
கிரிக்கெட் விளையாட்டு

பும்ரா, ஆர்ச்சர் கூட்டணி …. எங்கள் அணிக்கு கூடுதல் பலம் ….! ஆகாஷ் அம்பானி ….!!!

பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் இருவரால் எங்கள் அணியின்  பவுலிங் பலமாகிவிடும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெங்களூரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இந்நிலையில் காயத்தால் அவதிப்படும் ஜோப்ரா ஆர்ச்சர் நடப்பு ஐபிஎல்-ல்  தொடரில் விளையாட வாய்ப்பில்லை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறும்போது, “முதல் நாள் ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே எஞ்சி இருந்தார்.

அதனால் அவரை ஏலத்தில் எடுப்பது குறித்து ஆலோசித்தோம். அதேசமயம் இந்த ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் அவரால் விளையாட  முடியாது என்பது தெரியும். ஆனால் அவரின்  உடல் தகுதியை எட்டி, ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து பந்து வீசும் போது எங்கள் அணி பவுலிங்கில் பலமாகி விடுவோம் என நம்புகிறேன். அதனால் தான் அவரை ஏலத்தில் வாங்கினோம்” என்றார். மேலும் பேசிய அவர் ” சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் ரூபாய் 8 ¼ கோடிக்கு  ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை கொண்ட வீரர்களில் ஒருவர் ஆவார். அதேசமயம் ஹர்திக் பாண்டியா  அணியில் அந்த இடத்தை நிரப்ப அவரை போன்ற வீரர் அவசியம் என்பதால் டிம் டேவிட்டை எடுத்தோம்” இவ்வாறு அவர் கூறினார் .

Categories

Tech |