Categories
உலக செய்திகள்

சிறைக்குள் மோதல் – 16 கைதிகள் பலி

மெக்சிகோவில் சிறைக்குள் ஏற்பட்ட மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டனர்.

மெக்சிகோவின் ஜகாடிகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இந்த மோதலில், 16 கைதிகள் கொல்லப்பட்டதாவும், ஆறு பேர் காயமடைந்ததாவுகம் சிறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “இன்று மாலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் 16 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

சிறைகளில் அவ்வப்போது கைதிகள் மோதிக்கொள்வதும், அதில் உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதும் மெக்சிகோ சிறைச்சாலைகளில் வழக்கமாகி வருகின்றன.

Categories

Tech |