இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. நடிகர் சங்கம் இவருக்கு ரெட் கார்டு வழங்கியதன் காரணமாக சில வருடங்கல் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதனையடுத்து, மீண்டும் இவர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தற்போது இவர் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி என்று பலர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து “நாய் சேகர்” படத்தின் பாடல்கள் கம்போசிங்கிற்காக வடிவேலு, டைரக்டர் சுராஜ் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் லண்டன் சென்று இருக்கின்றனர். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு இப்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் வடிவேலுடன் இணைந்து படம் தயாரிக்கப் போவதாக கூறியிருந்தார். அதில் “நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அந்த திரைப்படம் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த படமாக இருக்கும். அவரால் அதை மிகச் சிறப்பாக செய்ய முடியும் என்று தெரிவித்தார். இயக்குனர் கவுதம் மேனன் வின்னைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் ‘வெந்து தனிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கௌதம் மேனன்- வடிவேலு இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.