நடிகர் சிம்பு, மன்மதன் படத்தின் தயாரிப்பாளர் குடும்பத்திற்கு உதவி செய்து வரும் செயலால் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் ஒருவர் சிம்பு. கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்புவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்த படம் “மன்மதன்”. இப்படத்தை தயாரித்து சிம்புவிற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் கிருஷ்ணகாந்த். மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “திருடா திருடி” படத்தை தயாரித்தவரும் இவர்தான். இதன்மூலம் தனுஷ் கமர்ஷியல் ஹீரோவாக ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்து, அவரின் மார்க்கெட் உயர காரணமாக இருந்தவர்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பின் இவரது மனைவியும், இரு மகன்களும் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த சிம்பு, இருப்பதற்கு கூட சரியான வீடு இல்லாத நிலையில், இவர்களுக்கு லீசுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் கிருஷ்ணகாந்த் குடும்பத்தாரிடம் சிம்பு, மன்மதன் 2 படத்தை வருங்காலத்தில் தான் எடுக்க போவதாகவும், அதை எடுத்து முடித்த பின் சொந்தமாக வீடு வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும், தனது ஆரம்ப காலத்தில் ஹிட் கொடுத்து தூக்கி விட்ட தயாரிப்பாளரை தனுஷ் மறந்தாலும், சிம்பு மறவாது அவருக்கு உதவி செய்துள்ளது, சிம்பு பழசை மறக்காது தக்க நேரத்தில் உதவி செய்துள்ளார் என அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.