மருத்துவமனை பெண்கள் வார்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனை பெண்கள் வார்டில் சுமார் 6 அடி நீளமான பாம்பு புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த 10-க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகள் பாம்பு பாம்பு என்று சத்தம் போட்டுக் கொண்டு அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நோயாளிகளின் படுக்கையின் கீழ் மாறி மாறி சென்று போக்கு காட்டிய பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு வனத்துறையினர் மூலம் பிடிக்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.