நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படதின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது வலைதள பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. கோபுர படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, ரஷ்யா போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 வருடம் தொடங்கப்பட்ட இப்படம் கொரோனா பாதிப்பு காரணமாக மூன்று ஆண்டுகள் பிறகு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து சமூக வலைத்தளம் மூலம் தனது உருக்கமான பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் “கிட்டத்தட்ட 3 வருடங்களாக படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. விக்ரம் சார் மற்றும் என்னுடன் படத்தின் குழுவினர் அனைவரும் போராட்டங்கள் மற்றும் கடினமான காலங்களில் கோபுரம் மீது நம்பிக்கை கொண்டிருந்ததற்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று உருக்கமான பதிவை சேர்ந்தார் மற்றும் சில புகைப்படங்களை இதனுடன் இணைத்துள்ளார்.