நடிகர் பிரஜன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரஜின் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். மேலும் இவர் பல சேனல்களில் பணியாற்றி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, சின்னத்தம்பி, அன்புடன் குஷி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நின்றவர். தற்போது இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடித்தார். இந்நிலையில் நடிகர் பிரஜினுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இதனால் அந்த சீரியலை விட்டு விலகினார்.
மேலும் பிரஜின் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனையடுத்து புதிய படத்தின் பெயர் “நினைவெல்லாம் நீயடா ” என தெரியவந்துள்ளது. மேலும் பிரஜன் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். தற்போது இந்த படத்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஆதி ராஜன் இயக்கி இளையராஜா இசையமைக்கிறார். இந்த புதிய படத்தில் நடிகர் பிரஜனுக்கு ஹீரோயினாக மனிஷா யாதவ் நடிக்கிறார்.