தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் நாளை (பிப்ரவரி 16) முதல் 20,000 மழலையர் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் (பிப்ரவரி 16) பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தால் கற்றல் பணி எளிதாக இருக்கும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories