குடும்பத்தகராறு குறித்து விசாரிக்க சென்ற போலீஸ்காரரின் கையை வாலிபர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கிருஷ்ணன் தனது மனைவியான கோமதியை அடித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோமதியின் அண்ணன் மெய்யப்பன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்காக போலீஸ்காரர்கள் மகேஷ்குமார், கார்த்தி ஆகியோர் கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது கிருஷ்ணனும், ஜோதிவேலும் இணைந்து போலீஸ்காரர்களை ஆபாசமாக திட்டியுள்ளனர். மேலும் கிருஷ்ணன் மகேஷ்குமாரின் கையைக் கடித்துள்ளார். இதனால் காயமடைந்த மகேஷ் குமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணன் மற்றும் ஜோதி வேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்