மின்வாரிய அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரியம் அந்த இடத்திற்கு எதிர் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மின்னிணைப்பு கொடுத்துள்ளது.
இதனால் கோபமடைந்த கருப்பையா மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மின் வாரிய அலுவலர்கள் கருப்பையாவை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.