Categories
மாநில செய்திகள்

TN TRB (2022) முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு பகுப்பாய்வு, மதிப்பாய்வு…. இதோ முழு விபரம்….!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) தற்போது முதுகலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் பணி இடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வுகளை பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 20 வரை நடத்தி வருகிறது. அந்த அடிப்படையில் இந்த தேர்வுகளை எழுதுவதற்காக முதல் தற்காலிக அனுமதி அட்டையை TN TRB வாரியம் வெளியிட்டு உள்ளது. ஆனால் விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்வு எழுதும் மாவட்டத்திலுள்ள தேர்வு மையத்தை குறிக்கும் 2-வது அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (பிப்.15) வரை கணினி அடிப்படையிலான தேர்வு அட்டவணை-Iன் படி தமிழ், வணிகவியல், வீட்டு அறிவியல், இந்திய கலாச்சாரம், இயற்பியல், புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு, வேதியியல் பாடங்களுக்கான தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் சில கடினமான கேள்விகளுடன் இடம் பெற்றிருந்ததாக தேர்வர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து பொருளாதாரம், தாவரவியல், உயிர்வேதியியல், விலங்கியல் மற்றும் உடற்கல்வி பாடங்களுக்கு TN TRB தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

TN TRB PG தேர்வுக்கான அட்மிட் கார்டு

விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை அட்மிட் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு முறை

# இதில் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு 150 MCQ-கள் கொண்ட 3 மணி நேரம் தேர்வாக இருக்கும்.

# இதில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் என்ற வீதத்தில் வழங்கப்படும்.

# இதையடுத்து முதுகலை உதவியாளர்களுக்கு;

# முதன்மை பாடம்- 110

# கல்வி முறை- 30

# பொது அறிவு- 10 என்று மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

# அதன்பின் முதுகலை கணினி பயிற்றுவிப்பாளருக்கு;

# கணினி அறிவியல் – 130

# பொது அறிவு – 10

# கல்வி உளவியல் – 10 என்று மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்

தேர்வு அட்டவணை

கணினி அடிப்படையிலான தேர்வு அட்டவணை- I

# பொருளாதாரம்

# தாவரவியல்

# உயிர் வேதியியல்

# விலங்கியல்

# உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |