வெடி பொருட்கள் கொண்டு சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அண்ணா நுழைவு வாயில் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை பவுடர் 25 கிலோ, கேமிக்கல் சால்ட் 25 கிலோ, அலுமினியம் பவுடர் 10 கிலோ ஆகியவற்றை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிக்கும் முன்வர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முன்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.