உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சாலையில் தாசில்தார் மகாதேவன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் சார்பதிவாளரான சேக்முகமது என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்ச ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து மானாமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.