மாறன் படக்குழு காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறும் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் “மாறன்”. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இப்படத்தில் தனுஷும் மாளவிகாவும் பத்திரிக்கை நிருபர்களாக நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் தனுஷ் மாறானாகவும், மாளவிகா தாராவாகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் மாறன் படக்குழுவினர்கள் நேற்று முன்தினம் காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறும் போஸ்டரை வெளியிட்டிருந்தன. அந்த போஸ்டரில் தனுஷும், மாளவிகாவும் அமர்ந்தவாறு ஒருவரை ஒருவர் ரொமான்டிக்காக பார்த்துக் கொள்கிறார்கள். போஸ்டர் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது ரீல் லைஃப்பில் தனுஷுக்கு கெமிஸ்ட்ரி மாளவிகா உடன் நன்றாகதான் ஒர்க் அவுட்டாகிறது.
Happy Valentine’s Day from us to you! 🥰♥️#Maaran ♥️
See you soon on @disneyplusHSTam !@dhanushkraja @karthicknaren_M @gvprakash @SathyaJyothi_ @thondankani @smruthi_venkat @Actor_Mahendran @KK_actoroffl @DisneyPlusHS pic.twitter.com/tFAQwGhKPI
— Malavika Mohanan (@MalavikaM_) February 14, 2022
ஆனால் உண்மையான குடும்ப வாழ்க்கையில் காதல் மனைவி ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்திருக்கிறார். தனுஷிடம் ரசிகர்கள் விடுக்கும் வேண்டுகோள், அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று ஐஸ்வர்யாவுடன் இணைந்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். இதனைதொடர்ந்து மாறன் திரைப்படமானது தியேட்டரில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இது ரசிகர்களுக்கிடையே ஏமாற்றத்தை தந்திருக்கிறது. தனுஷின் திரைப்படம் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.