Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) தமிழக கூட்டுறவு துறையில் காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு விதமான போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் கூட்டுறவுத் துறையில் 8 தணிக்கை பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.ஏ (கூட்டுறவு) அல்லது எம்.காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர். அதாவது, எழுத்துத் தேர்வு ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாளும், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்வுகளில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் தகுதியுடையோர் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். இதனிடையில் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள், SC/ST பிரிவினர், விதவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இத்தேர்விற்கு பிப்ரவரி 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ஊதியமாக ரூபாய் 56,100-1,77,500 வரை வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |