விஷய மாத்திரைகளை சாப்பிட்டு பஸ் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டி கிராமத்தில் கண்டக்டராக பத்மநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாதன் தனது வீட்டில் வைத்து விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த பத்மநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பத்மநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார் . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.