தண்ணீரில் முழுகி கொத்தமல்லி பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குகன்பாறை, பூசாரி நாயக்கன்பட்டி, அம்மையார் பட்டி, மேலே தொட்டம்பட்டி, மரத்து பட்டி, ஏண்டக்காபட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் கொத்தமல்லியை பயிரிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொத்தமல்லியை பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு பெய்த கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி வெளியேறாததால் பயிர்களின் வேர் அழுகி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொத்தமல்லி ஒரு குவிண்டாலுக்கு 5,300 வரை அதிகமான விலை கிடைக்கிறது, ஆனால் இந்த ஆண்டு ஏக்கருக்கு 4 முட்டைகள் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே ஆறாயிரத்திற்கும் மேலாக விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.