காதல் திருமண ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாதானம் கிராமத்தில் சிவசண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் குமரக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை 7 வருடமாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சிவசண்முகம், விஜயலட்சுமியும் வீட்டை விட்டு கிளம்பி மாரியம்மன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காவல்நிலையத்துக்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை குடும்பத்தினருடன் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் 7 வருட கால காதல் வெற்றிபெற்றதாக காதல் திருமண ஜோடியினர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.