Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பைக்குகள்…. பறிபோன வாலிபர் உயிர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் காயமடைந்த நிலையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கிடாக்குலம் பகுதியில் தீபக்ராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரி வாலிபரான இவர் சம்பவத்தன்று கடலாடியை சேர்த்த பூவரச பாண்டி(22), பூதங்குடியை சேர்ந்த ராஜகுமாரன்(27) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கடலாடியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே சாயல்குட்யை நோக்கி தேரங்குளத்தை சேர்ந்த அழகர்நாதன்(47) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து இருவரது இருசக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிகொண்டுள்ளது. இந்த கோர விபத்தில் அழகர்நாதன், பூவரச பாண்டியன், ராஜகுமாரன் ஆகிய 3 பேர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில் தீபக்ராஜ் பலத்தகாயமடைந்துள்ளர். இதனைதொடர்ந்து தீபக்ராஜ் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |