மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் 7-வது மாடியில் லிப்ட் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தாஸ் என்பது தெரியவந்துள்ளது.