Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. ஆசிரியர் செய்த வேலை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….

அதிகாரி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சின்னதுரை என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் சின்னதுரை பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பொதுமக்கள் சின்னதுரையை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்துள்ளனர். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட சின்னதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சின்ன துரையை பணியிடை நீக்கம் செய்து வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |