கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விட்டுக் கொடுத்ததை பற்றி கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 590 பேர் பங்கேற்றனர். ஆனால் 204 பேர் மட்டுமே ஏலம் போய் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 67 பேர் மற்றும் உள்நாட்டு வீரர்கள் 137 பேர் ஆகும். இவர்களின் மொத்த மதிப்பு ரூ. 551.70 கோடியாகும். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தலா 25 பேரை வாங்கியுள்ளன.
இந்த அணிகள் அதிகபட்சமாகவும் மற்றும் லக்னோ அணி குறைந்தபட்சமாக 27 பேரை மட்டுமே வாங்கியுள்ளது. மேலும் ஐபிஎல்க்கு புதிதாக வந்துள்ள லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி, பெரிய தொகைகளை விட்டுக்கொடுத்த தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, குவின்டன் டிகாக் போன்ற சிறந்த வீரர்களை வாங்கினார்கள். இப்படிப்பட்ட தரமான வீரர்களை அந்த அணி வாங்கியதற்கு முக்கிய காரணம், அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீர் தான் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த மெகா ஏலத்தில் செயல்பட்ட விதம் குறித்து பேசியுள்ள கம்பீர் கூறியதாவது, மெகா ஏலத்தை பொருத்தவரை எங்களின் சிறந்த ஏலம் என்றால் அது சிஎஸ்கேயிடம் இருந்து வெறும் 90 லட்சத்திற்கு கிருஷ்ணப்பா கௌதமை வாங்கியதுதான் என்று கூறினார். இவரை 9.25 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு சிஎஸ்கே வாங்கி உள்ள நிலையில், இவரை மீண்டும் வாங்க போட்டி போடும் என்று தான் நினைத்தோம். நல்லவேளை அவர்கள் பின் வாங்கி விட்டதால், கிருஷ்ணப்பாவை நாங்கள் மிக குறைந்த விலைக்கு வாங்க முடிந்தது. மேலும் க்ருனால் பாண்டியாவுடன் பேட்டிங், பந்துவீச்சில் செயல்பட இவர் மிகவும் பொருத்தமானவர் என்றும் கூறியுள்ளார்.