Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார்…. சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து விபத்து….. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் ரவுண்டானாவில் இருந்து திருமங்கலம் நோக்கி 2 சொகுசு கார்கள் அதிவேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு சொகுசு கார் சாலையின் இடது புறம் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்துவிட்டது. அப்போது மின்கம்பம் மற்றும் சிறிய கடையை இடித்து தள்ளியபடி நடைபாதை மீது ஏறிய கார் சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டர் கதவில் மோதி நின்றது. இதனை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்தில் கடை ஊழியரான ஓசிம் என்பவர் படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் காரில் வந்தவர்கள் நைசாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த ஊழியரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

இந்த சொகுசு காரை அவரது மகன் ராஜேஷ் நண்பர்களுடன் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் பந்தயத்தில் ஈடுபட்டு காரை போட்டி போட்டு வேகமாக ஓட்டி வந்தனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |