அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
இமாச்சல பிரதேச அரசு சுமார் 1.25 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் பென்சன் மேலும் மற்றும் குடும்ப பென்சன் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பென்சன் வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் சுமார் 43,000 அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் எனவும் பணிக்கொடை தொகையும் உயர்த்தப்படுவதாக இமாச்சல அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பணிக்கொடை தொகை ரூபாய் 10,0000 ல் இருந்து 20,0000 ரூ உயர்த்த இமாச்சல பிரதேச அரசு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. 2020 1 ஜூலை 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி நிவாரண 31% உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.