அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே தவணையாக அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா கால கட்டத்திற்குப் பின்னர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 31 சதவிகிதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படியை ஒரே தவணையாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அரசு ஊழியர்களின் ரேஞ்சுக்கு ஏற்ப சுமார் 1,44,200 ரூபாய் முதல் 2,18,200 ரூபாய் வரை ஒரே தவணையாக அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும். இதன் மூலம் சுமார் 48 லட்சம் ஊழியர்களும், 60 லட்சம் பென்ஷன் தாரர்களும் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.