மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டத்தின் மூலம் சாதாரண கூலித் தொழிலாளிகளும் பென்ஷன் பெறலாம். இந்த திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பிரத்யேக திட்டமாகும். இந்த திட்டத்தில் இணையும் தொழிலாளர்களின் மாத வருமானம் 18 ஆயிரம் அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் இணையும் ஊழியர்களுக்கு 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூபாய் 3000 பென்ஷனாக கிடைக்கப்பெறும். அதோடு ஊழியர்களுக்கு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். வீடு சார்ந்த வேலைகள், சாலையோர வேலைகள், செங்கல் பணியாளர்கள், பீடி சுற்றுபவர்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் ஆகியோர் இந்தத் திட்டத்தில் இணையலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.