தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் உள்ள பனிமலர் மருத்துவ கல்லூரியில் சுகாதார கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “பொது மக்களிடம் ஓட்டு கேட்டு செல்லும் அனைத்து அரசியல்வாதிகளும் பிச்சைக்காரர்கள் தான் பிச்சைக்காரர்கள்.
பிச்சைக்காரர்கள் ஐயா ,அம்மா தர்மம் போடுங்கள் என கேட்பார்கள். நாங்கள் ஐயா அம்மா ஓட்டு போடுங்கள் என கேட்கிறோம். இதில் எந்த மாறுபாடும் இல்லை ஆகவே நாங்களும் பிச்சைக்காரர்கள் தான். அதோடு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தான் அரசின் உண்மை தன்மை உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தின்போது மக்களை திறம்பட மீட்டெடுத்தவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல்வரின் துரித நடவடிக்கையால் மக்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.” என அவர் கூறினார்.