இன்ஸ்டாகிராமில் நமது ஸ்டோரியை பார்ப்பவர்கள் லைக் செய்தால், இப்போது உள்ளது போல் நமது இன்பாக்ஸ்க்கு நேரடி மெசேஜாக வராமல் இனிமேல் நோட்டிபிகேஷனாக மட்டுமே வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூட்யூபில் இருப்பது போன்று சப்ஸ்கிரிப்ஷன் வசதியும் இன்ஸ்டாவில் வர இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் யூட்யூப் போலவே இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் வீடியோ/ரீல்ஸ் பதிவேற்றம் செய்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். தற்போது அமெரிக்காவில் அறிமுகம் ஆகும் இந்த முறை விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.