சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வலிப்பு வந்தால் சாவி, இரும்பு பொருட்களை கொடுக்கக் கூடாது என்றும் நினைவு திரும்பும் வரை தண்ணீர் கொடுக்கக் கூடாது என்றும் டீன் சாந்திமலர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வலிப்பு நோய் என்பது மூளையில் ஏற்படும் பாதிப்பால் வருகிறது. இதனால் வலிப்புக்கான மாத்திரை, மருந்துகளை நேரம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதையடுத்து வாகனம் ஓட்டுவதையும், நீச்சல் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.