பழம்பெரும் பெங்காலி பாடகியான சந்தியா முகோபாத்யாய்(90) நேற்று மாலை உயிரிழந்தார். இந்த வருடம் குடியரசு தின விழாவுக்கு முன்னதாக அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது. அந்த விருதை நிராகரித்ததற்காக பாடகி சந்தியா தேசியத் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். கடந்த ஜனவரி 27ஆம் தேதி பாடகி சந்தியா கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
இதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின்படி அவருக்கு அரசு நடத்தும் எஸ்எஸ்கேஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஐபிகள், விவிஐபிகளுக்கு ஒதுக்கப்பட்ட வுட்பர்ன் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார்.