பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக பேரணி மற்றும் போராட்டங்களை நடத்த உள்ளதாக நாடுளுமன்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூரில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் ஆகியோர் இணைத்து முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது. மேலும் அவருக்கு அடுத்ததாக யாரை முன்னிறுத்துவது போன்ற விஷயங்களை உரையாட உள்ளனர். பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு பதிலாக அடுத்த பிரதமராக மக்கள் கட்சியின் அஸிப் அலி சாஸ்திரியை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து பேரணி மற்றும் போராட்டங்களை இம்ரான் கானுக்கு எதிராக நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.