மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுக பிரமுகருமான இளங்கோவனின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். சேலம்- புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது தோட்ட வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, பணம் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக வந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Categories