Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்த பா. ரஞ்சித் அண்ணன்…..!!

பா. ரஞ்சித்தின் அண்ணன் கர்லபாக்கம் வழக்கறிஞர் பிரபு அதிமுக, திமுக வேட்பாளர்களை தோற்கடித்து வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

வில்லிவாக்கம் ஒன்றியத்தில் கரலபாக்கம் சுயேச்சை வேட்பாளர் வழக்கறிஞர் பிரபு என்பவர் தண்ணீர் குழாய் சின்னத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இவர், பிரபல திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தின் அண்ணன் ஆவார். இவருக்காக இயக்குநர் பா. ரஞ்சித் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், 30ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது சொந்த ஊருக்கு வந்து வாக்கைச் செலுத்தினர். இந்நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதில், 3 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளரான இளம்பருதியையும் 2 ஆயிரத்து 555 வாக்குகள் பெற்ற அதிமுக வேடபாளர் ராமமூர்த்தியையும் பின்னுக்குத் தள்ளி வழக்கறிஞர் பிரபு வெற்றி பெற்றுள்ளார். இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தான் தந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |